#BREAKING:: மிகப்பெரிய பனிச்சரிவு.. சிக்கிம் மாநிலத்தில்"6 பேர் பலி.. 80 பேர் மாயம்".! மீட்பு பணிகள் தீவிரம்..!! - Seithipunal
Seithipunal


சிக்கிம் மாநில தலைநகர் ஆங்காங் மற்றும் நாதுலா இடையே சாங்கு சாலையில் 17 மைல் தொலைவில் இன்று பிற்பகல் ஏற்பட்ட பனிச் சரிவில் 150 சுற்றுலா பயணிகள் சிக்கிய நிலையில் 6 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போர்க்கால அடிப்படையில் பனிச்சரிவில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளை மீட்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் கிழக்கு சிக்கிமின் நாதுலா, பாபா மந்திர், சாங்கு பகுதிகளில் ஆங்காங்கே பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் 15 மைல்களுக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை பனிப்பொழிவு பற்றிய தகவல் கிடைத்தவுடன் சுற்றுலா குழு காலை சாங்குவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

உள்ளூர் மக்களின் தகவலின் படி சில சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் காரை 15 மைல்களில் விட்டுவிட்டு 17 மைல் தூரத்தை நடந்து சென்றுள்ளனர். புகைப்படம் எடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. அப்பொழுது மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் புதையுண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த பனிச்சரியில் பலர் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் குழந்தைகளும் இருப்பதாக அறியப்படுகிறது. புதையுண்ட சுற்றுலாப் பயணிகளில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. உயிரிழந்தவர்களில் 4 பேர் ஆண்கள் என்றும் ஒரு பெண், ஒரு குழந்தை என தெரியவந்துள்ளது.

மேலும் பனிச்சரிவில் சிக்கி உள்ள சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள எஸ்.டி.என்.எம் மற்றும் சி.ஆர்.எச் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பனிச்சரிவில் சிக்கி உள்ள சுற்றுலாப் பயணிகளை சிக்கிம் மாநில போலீசார், சிக்கிம் டிராவல் ஏஜெண்டுகள் சங்கம், சுற்றுலாத்துறை அதிகாரிகள், வாகன ஓட்டிகள் என பலர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போன்று சிக்கிம் மாநிலத்தில் சாங்கு ஏரி பகுதியில் செல்லும் பொழுது கடும் பனிப்பொழிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஆபரேஷன் ஹிம்ராஹத் பெயரில் ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Massive valanche in sikkim 6 tourist died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->