முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு :மோடி அரசால் சீரழைக்கப்பட்ட கல்விமுறை - ராகுல் காந்தி!
Master NEET Postponement Education system compromised by Modi government Rahul Gandhi
மோடி அரசால் சீரழைக்கப்பட்ட கல்விமுறையின் மற்றும் ஓர் எடுத்துக்காட்டு தான் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு என காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தாண்டு வெளியான நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவிற்கு 67 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்து உள்ளனர். அரியானா ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 7 பேர் முழுமதிப்பெண் எடுத்திருப்பது நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
இந்தநிலை, இந்த நிலையில் ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வில் விவகாரத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு ஏந்துள்ளது. அதனை அடுத்து இன்று நடைபெற இருந்த முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், மோடியின் கையாலாகாத அரசுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மோடி அரசால் சீரழிக்கப்பட்ட கல்வி முறையின் மற்றுமோர் எடுத்துக்காட்டு தான் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.
பாஜக ஆட்சியில் மாணவர்களில் தங்கள் எதிர்காலத்தை கல்வியில் கவனம் செலுத்துவதை விட அரசுடன் போராடுவதில் அதிக கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எல்லாவற்றையும் அமைதியாக மோடி வேடிக்கை பார்க்கிறார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
English Summary
Master NEET Postponement Education system compromised by Modi government Rahul Gandhi