மே மாதத்தில் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை-ரிசர்வ் வங்கி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, வரும் மே மாதம் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறித்துள்ளது.

விடுமுறை நாட்களின் பட்டியல்

மே 1-ஞாயிறு

மே 2-ரம்ஜான்

மே 3 - பகவான் ஸ்ரீ பரசுராம் ஜெயந்தி

மே 8-ஞாயிறு

மே 9- ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள். மேற்கு வங்கத்தில் வங்கிகளுக்கு விடுமுறை

மே 14 -சனிக்கிழமை

மே 15 -ஞாயிறு

மே 16- புத்த பூர்ணிமா. திரிபுரா, பேலாபூர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா, உத்தரகாண்ட், ஜம்மு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, புதுதில்லி சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.

மே 22-ஞாயிறு

மே 28-சனிக்கிழமை

மே 29-ஞாயிறு

விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

May Month 11 days holiday for bank reserve Bank of India announced


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->