பெங்களூருவில் விண்ணை பிளக்கும் விமான கண்காட்சி - இறைச்சி கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஏரோ இந்தியா 2025 சார்பில் கர்நாடகா மாநிலம் பெங்களூர்வின் புறநகரில் உள்ள யெலஹங்காவில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை விமான கண்காட்சி நடைபெற்றவுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய 15வது விமானக் கண்காட்சியான இதனைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 23ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகள் மற்றும் அசைவ ஹோட்டல்கள் மூட பெங்களூரு சிவில் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "ஏரோ இந்தியா-2025 நிகழ்ச்சி யெலஹங்காவின் விமானப்படை நிலையத்தில் 10.02.2025 முதல் 14.02.2025 வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவு வரை அசைவ உணவுகளை பரிமாறுவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. 

பொது இடங்களில் அசைவு உணவுகள் இருப்பதால் அதை உண்பதற்காக பறவைகள் வருகின்றன. நடுவானில் விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meet shops closed for banglore air show


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->