4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்துச் சென்ற தாய்க்கு மனநல சோதனை.! - Seithipunal
Seithipunal


அண்மையில், கோவாவில் ஓட்டல் ஒன்றில் தனது 4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிறுவனர் சுசனா சேத்தை கடந்த டிசம்பர் 8-ம் தேதி போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக முழு விவரங்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தின் பிரேத பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் குழந்தையை தலையணை அல்லது துணியை வைத்து அழுத்தியதில் குழந்தை மூச்சுதிணறி இறந்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் வெங்கடரமணாவுடன், தன்னுடைய மகன் பேசுவது சுசனா சேத்துக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. 

இதனால், கணவர் மீது கடும் கோபத்தில் இருந்த சுசனா தனது கணவரை பழிவாங்க எண்ணி மகனை கொன்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், சுசனா சேத் தனது கையை அருத்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே போலீசார் கோவாவில் சுசனா சேத் தங்கியிருந்த ஓட்டல் அறையை சோதனை மேற்கொண்ட போது இருமல் டானிக் பாட்டில்கள் காலியாக கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனால் சுசனா குழந்தைக்கு அதிக அளவில் மருந்தைக் கொடுத்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து சுசனா சேத்தின் மனநிலையை மதிப்பிடுவதற்கும், கொடூரமான குற்றத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் உளவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mentality test to woman for murder four years old son in goa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->