பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் - மும்பை போலீசாருக்கு வந்த குறுஞ்செய்தி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் மும்பை காவல் போக்குவரத்து பிரிவின் உதவி எண்ணிற்கு நேற்று வாட்ஸ்ஆப் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த செய்தியில், இரண்டு ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீசார் உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பியவரின் இருப்பிடத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டபோது அந்த குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகவோ, அல்லது மதுபோதையிலோ இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பை போலீசாரின் உதவி எண்ணிற்கு ஏற்கனவே இதுபோன்ற மிரட்டல் குறுஞ்செய்திகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

message come in mumbai police for kill threat to pm modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->