திடீரென இடிந்து விழுந்த மெட்ரோ ரெயில் நிலைய சுவர்: ஒருவர் பரிதாப பலி!  - Seithipunal
Seithipunal


டெல்லி, கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று காலை 11 மணியளவில் ரயில் நிலைய மேடையின் எல்லை சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் காரவால் நகரை சேர்ந்த வினோத்குமார் (வயது 53) என தெரியவந்துள்ளது. 

மேலும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அஜித்குமார் என்பவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தார். மேலும் மூன்று பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்து தொடர்பாக 2 அதிகாரிகள், மேலாளர், ஜூனியர் என்ஜினீயர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே கட்டிட இடைபாடுகள் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. லேசான காயமடைந்தவருக்கு ரூ. 1 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metro rail station wall collapsed one person killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->