வெறும் வாக்குறுதிகளை அளிக்கும் அரசியலை பாஜக நிராகரித்து விட்டது - அமித்ஷா பேச்சு.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில், பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:- "குஜராத் மாநிலத்தில் பாஜகவிற்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த மக்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தல் வெற்றி பிரதமர் மோடியின் வளர்ச்சி மாதிரி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. 

குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக அனைத்து வளர்ச்சி சாதனைகளையும் முறியடித்தது. தற்போது, மீண்டும் மக்கள் பஜகவை ஆசீர்வதித்து, வெற்றி சாதனைகளையும் முறியடிக்கச் செய்துள்ளனர். இதன் மூலம், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் என்று அனைத்து தரப்பினரும் பாஜகாவுடன் இருப்பது தெளிவாக தெரிகிறது.

இந்தத் தேர்தலில் இலவசம் மற்றும் வெறும் வாக்குறுதிகளை அளிக்கும் அரசியலை மக்கள் நிராகரித்து விட்டு, மக்கள் நலனுக்காக பாடுபடும் மோடியின்  முன் இதுவரை இல்லாத வெற்றியை அளித்துள்ளனர். 

இந்த வெற்றிக்காக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, முதலமைச்சர் பூபேந்திர படேல், கட்சியின் மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:- "குஜராத் மாநிலத்தில் பாஜகவிற்கு கிடைத்த வெற்றி, வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவை மீது பாஜக கொண்டுள்ள உறுதியை காட்டும் வெற்றி ஆகும்.

இந்த வெற்றிக்கான பெருமை அனைத்தும் பிரதமர் மோடியையே சாரும். ஜே.பி.நட்டா, அமித்ஷா, பூபேந்திர படேல், சி.ஆர்.பட்டீல் உள்ளிட்டோரின் கடின உழைப்பால், பாஜக எல்லா சாதனைகளையும் முறியடித்து சரித்திர வெற்றி படைத்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister amithsha twiter post for gujarat state election bjp win


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->