தமிழக மீனவர்கள் "உரிமை இழக்க" இது தான் காரணம்.. அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்..!!
Minister jaishankar explain on kachchatheevu issue
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு கட்ச தீவை எதுவும் பேசாத நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது குறித்து பேசி இருந்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர் தற்போது தேர்தல் அரசியலுக்காக கட்சித் தேர்வு பற்றி பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்சி வருகின்றன.
இந்த நிலையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதை 1974 ஒப்பந்தம் தடை செய்கிறது. இந்திய மீனவர்கள் உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் 1974-இல் விளக்கம் தரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சருக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்" என தெரிவித்துள்ளார். இந்த விளக்கத்தின் மூலம் காங்கிரஸ் திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் தான் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு முழு காரணம் என மறைமுகமாக குறிப்பிடுகிறார்.
English Summary
Minister jaishankar explain on kachchatheevu issue