விரைவில் தடையில்லாத சுங்க வசூல் முறை அமல்படுத்தப்படும் - அமைச்சர் வி.கே.சிங்.! - Seithipunal
Seithipunal


விரைவில் தடையில்லாத சுங்க வசூல் முறை அமல்படுத்தப்படும் - அமைச்சர் வி.கே.சிங்.!

டெல்லியில் நேற்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ராஜாங்க அமைச்சர் வி.கே.சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் 'பாஸ்ட்டேக்' அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாகனங்கள் காத்திருக்கும் நேரம் சராசரியாக 47 வினாடிகளாக குறைந்துள்ளது.

அந்த நேரத்தை 30 வினாடிகளுக்கு கீழே குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி, நாட்டில் "தடையில்லாத சுங்க வசூல்" முறையை அமல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால், வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில்  காத்திருக்க தேவையிருக்காத நிலை உருவாகும். தற்போது இந்தத் தடையில்லாத சுங்க வசூல் முறை டெல்லி-மீரட் விரைவுச்சாலையில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

செயற்கைகோள் மற்றும் கேமரா அடிப்படையில் இந்த முறை செயல்படும். உங்களின் வாகனம், ஒரு நெடுஞ்சாலையில் நுழைந்ததுமே அதன் பதிவெண், அங்குள்ள கேமராவால் 'ஸ்கேன்' செய்யப்பட்டு, தகவல் தொகுக்கப்படும்.

உங்கள் வாகனம் எத்தனை கி.மீ. பயணித்துள்ளதோ, அந்த தூரத்துக்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய முறையால், சுங்க கட்டண வசூல் திறன் அதிகரிக்கும், வாகனங்களின் பயண நேரம் குறையும். 

தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் வெற்றி அடைந்தால், விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். தற்போதைய அரசு ஏற்படுத்தியுள்ள முன்னேற்றம் காரணமாகவே தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இதுபோன்ற நவீன முறைகளை செயல்படுத்த முடிகிறது" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister v k singh press meet in delhi barrier toll systerm


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->