டிஆர்எப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.!
Ministry of Home Affairs declared trf terrorist organization
கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது டி.ஆர்.எப். அமைப்பு. இந்த அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஆன்லைன் ஊடகம் மூலம் இளைஞர்களை சேர்த்து வருகிறது.
இந்த அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாத ஆட்சேர்ப்பு, பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா அமைப்பின், பினாமி அமைப்பு எனப்படும் இந்த டிஆர்எப் அமைப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் பயங்கரவாத அமைப்பாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீர் மக்களை இந்திய அரசுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளில் சேர தூண்டுவதற்காக சமூக ஊடக தளங்களில் உளவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Ministry of Home Affairs declared trf terrorist organization