நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் விருது அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும், முன்னாள் பாஜக எம்பியுமான மிதுன் சக்கரவர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1950-ல் கல்கத்தாவில் ஒரு கீழ்நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் மிதுன். இயற்பெயர் கௌரங்கா சக்ரவர்த்தி. 1976-ல் வெளியான ‘மிருகயா’ என்கிற இந்தித் திரைப்படத்தில் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி அறிமுகமானார். தனது அறிமுக திரைப்படத்திலேயே தேசிய விருது பெற்ற முதல் நடிகர் மிதுன் சக்கரவர்த்திதான். 

1982-ல் வெளியான ‘டிஸ்கோ டான்ஸர்’ என்னும் இந்தித் திரைப்படம் மிதுன் சக்ரவர்த்தியின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. 1989-ம் ஆண்டில் மட்டும் மிதுன் ஹீரோவாக நடித்த 19 திரைப்படங்கள் வெளியாகின. இந்தச் சாதனை இதுவரையிலும் முறியடிக்கப்படவில்லை. 

2015-ல் வெளியான ‘யாகாவராரயினும் நா காக்க’ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் ‘முதலியார்’ என்னும் பாத்திரத்தில் நடித்து உள்ளார். இவருக்கு 2024-ல் பத்ம பூஷண் விருது கிடைத்த நிலையில், இன்று தாதா சாஹெப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mithun Chakraborty Dadasaheb Phalke


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->