திருப்பதி லட்டு விவகாரம் - சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்  - Seithipunal
Seithipunal


கடவுளை அரசியலில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று, திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

திருப்பதி லட்டுவில் விலங்கு எண்ணெய் கலக்கப்பட்டதாக சொல்லப்படும் விவகாரம் தொடர்பான வழக்கில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பாக, பாஜகவை சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம், "விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான ஆய்வகங்களின் அறிக்கை தெளிவில்லாமல் உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றால், பத்திரிகைகளுக்கு ஏன் செல்ல வேண்டும்? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்ப்பி உள்ளது.

திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதம் வந்த நிலையில், அதனை செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? என்றும் ஆந்திர மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tripathi Lattu issue case SC Condemn to Andhra CM Chandrababu nayudu


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->