ஜூன் 8-ம் தேதி பதவியேற்க உள்ள மோடி, தொடர்ச்சியாக மூன்றாவது முறை
modi as a prime minister for the third time
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையாக கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து , ஜூன் 8ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன, நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்த பிறகு, இந்திய வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்தும் இரண்டாவது பிரதமர் மோடி ஆவார்.
17வது மக்களவையை கலைக்க மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரைக்கபட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், ஜனாதிபதி திரௌபதி முர்மு தற்போதைய மக்களவையைக் கலைத்துவிட்டு 18வது மக்களவையை அமைக்கத் தொடங்குவார்.
பிரதமர் மோடியின் மத்திய மந்திரி சபைக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் பிரியாவிடை விருந்து அளிக்கிறார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை பாஜக, 240 இடங்களில் வெற்றி பெற்றது , தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 272 பெரும்பான்மையை தாண்டியது. ஆந்திராவில் BJP யின் முக்கிய கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு மற்றும் பீகாரில் நிதிஷ் குமாரின் JD(U) மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், NDA 293 இடங்களை பெற்று பாதியை தாண்டியது. NDA மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி, BJPயின் கூட்டணிகளான TDP மற்றும் JD(U) ஆகிய கட்சிகளை சந்திக்கும்.
வளர்ந்த மற்றும் வளமான இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அனைத்து மாநிலங்களுடனும் இணைந்து பணியாற்றப் போவதாக பிரதமர் மோடி கூறினார். தேர்தல் முடிவுகள் வெளியான உடன் தனது முதல் உரையில் மோடி மூன்றாவது தவணைக்கான தனது பார்வையை வகுத்தார், இது பெரிய முடிவுகளின் பதவிக்காலமாக இருக்கும் என்றும் ஊழலை வேரோடு பிடுங்குவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.
“ஊழலுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. அரசியல் நலனுக்காக ஊழல் வெட்கமின்றி கொச்சைப்படுத்தப்படுகிறது. எங்கள் மூன்றாவது ஆட்சியில், அனைத்து வகையான ஊழலையும் வேரறுப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக கவனம் செலுத்தும்” என்று மோடி கூறினார்.
English Summary
modi as a prime minister for the third time