ராஜ்காட் மற்றும் அடல் சமாதியில் அஞ்சலி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி - Seithipunal
Seithipunal


இந்திய தலைநகரான புதுடெல்லியில் இன்று பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. இன்று ராஷ்டிரபதி பவனில் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பிரதமர் மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிரதமருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இன்று பிரதமரின் பதவியேற்பு விழாவில் வெளிநாடுகளின் தலைவர்களுடன் நாட்டின் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது.

குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவுக்குச் செல்வதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை முதலில் ராஜ்காட் சென்று தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். அடல் பிஹாரி வாஜ்பாயின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு போர் நினைவிடத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இன்று திரு.நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றதன் மூலம் 62 ஆண்டுகால ஜவஹர்லால் நேருவின் சாதனை முறியடிக்கபட்டுள்ளது. பண்டிட் ஜவாஹர்லால் நேரு 1952, 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நரேந்திர மோடிக்கு இது மூன்றாவது முறையாகும். 2014, 2019க்கு பிறகு 2024ல் பிரதமர் மோடி நாட்டை வழிநடத்தப் போகிறார்.

இன்றைய தினம் டெல்லியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவையொட்டி, மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை மற்றும் அதற்காக  NOTAM வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட விமானங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. மேலும் விமானப்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவ விமான ஹெலிகாப்டர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

இதனால் டெல்லியில் ராஷ்டிரபதி பவன் அருகே போக்குவரத்தை கட்டுப்படுத்த 1100 பணியாளர்கள் போக்குவரத்து கட்டுப்பாடு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சன்சாத் மார்க், நார்த் அவென்யூ ரோடு, சவுத் அவென்யூ ரோடு, குஷாக் ரோடு, ராஜாஜி மேனன் மார்க், டால்கடோரா ரோடு, ராஷ்டிரபதி பவன் அருகே பண்டிட் பந்த் மார்க் ஆகிய இடங்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை வழித்தடத்தில் மாற்றம் செய்யப்படும்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ஏராளமான விருந்தினர்களும் வருகின்றனர். விஐபி இயக்கம் நாள் முழுவதும் சாலைகளில் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi gave respect to atal bihari and mahatma gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->