#BreakingNews : பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி! - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்து வரும் 8ம் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், 17வது மக்களவை அமைச்சரவை களைப்பு. ஜனாதிபதியை சந்தித்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தியாவில் 7 கட்ட கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் நடந்த ஜூன் 1ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனை அடுத்து நேற்று ஜூன் 4ம் இந்தியாவில் 18வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தொகுதி வாரியாக, மாநிலம் வாரியாக முடிவுகள் வெளியானது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி இந்திய அளவில் 296 இடங்களை பெற்றுள்ளது. அதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 240 இடங்களை கைப்பற்றி உள்ளது. மத்தியில அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே அமைய வாய்ப்புள்ளது.

இதற்கிடையே  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்  இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 8ம் தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதியை சந்தித்து கடிதம் அளித்துள்ளார். பிரதமர் மோடியின் ராஜினாமா கடித்தை ஜனாதிபதி ஏற்றுக்கொணடார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi resigned as Prime Minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->