இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது - பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றார்.

இதையடுத்து, ஜி-20 மாநாட்டு நடைபெறும் அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடியை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார். 

இந்நிலையில், மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது என்றும், உலகில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உறுதியான மற்றும் கூட்டு உறுதியைக் காட்டுவது காலத்தின் தேவையாகும்.

மேலும் 2030ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் என்றும், உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி விநியோகத்தில் தடையை ஊக்குவிக்க கூடாது, எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை அவசியம். பசுமையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதி கொண்டுள்ளது என்றார். உக்ரைனில் போர் நிறுத்தம் மற்றும் இராஜதந்திர பாதைக்கு திரும்புவதற்கான வழியை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். 

மேலும் புத்தர் மற்றும் காந்தியின் புனித பூமியில் அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு நடைபெறும் போது, உலகிற்கு அமைதிக்கான வலுவான செய்தியை தெரிவிக்க நாம் அனைவரும் உடன்படுவோம் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi says India energy security is key to global economic growth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->