ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 இந்தியாவில் அறிமுகம் – 648cc எஞ்சின், மூன்று வகைகள், ₹3.37 லட்சம் தொடக்கம்!முழு விவரம்! - Seithipunal
Seithipunal


சென்னை: பிரபல பைக் உற்பத்தியாளரான ராயல் என்ஃபீல்டு, அதன் புதிய கிளாசிக் 650 மாடலை இந்திய சந்தையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ராயல் என்ஃபீல்டின் 650சிசி வரிசையில் இது ஆறாவது மாடல் ஆகும்.

மூன்று வகைகளில் அறிமுகமாகும் இந்த பைக், Hotrod, Classic, Chrome என வழங்கப்படுகிறது. பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹3.37 லட்சம் முதல் ₹3.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய கிளாசிக் 650 பைக்கில், 648சிசி Parallel Twin எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 47bhp பவர் மற்றும் 52.3Nm டார்க் உற்பத்தி செய்யும். 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் & அசிஸ்ட் கிளட்ச் வசதி கொண்டுள்ளது.

வடிவமைப்பில், இதன் தோற்றம் ராயல் என்ஃபீல்டின் Classic 350 பைக்கை நினைவுபடுத்துகிறது. பைலட் லேம்ப், டீ டிராப் எரிபொருள் டேங்க், வட்டமான டெயில் லேம்ப், பீஷூட்டர் எக்ஸாஸ்ட் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், LED ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ட்வின் ABS பிரேக், C-Type சார்ஜிங் போர்ட் போன்ற நவீன அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

243 கிலோ எடையுடன் வரும் இந்த பைக்கின் எரிபொருள் தொட்டி கொள்ளளவு 14.7 லிட்டர். இருக்கை உயரம் 800 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 154 மிமீ ஆகும். பைக் நான்கு வண்ணங்களில் வழங்கப்படுகிறது – Vallum Red, Bruntingthorpe Blue, Teal Green, Black Chrome.

இந்த பைக்கிற்கான முன்பதிவு, டெஸ்ட் ரைடு, விற்பனை இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளதாக ராயல் என்ஃபீல்டு அறிவித்துள்ளது. விரைவில் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Royal Enfield Classic 650 launched in India 648cc engine three variants starting at 3 lakh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->