''பேஷன் ஷோ'' என நினைத்தேன்... எதிர்க்கட்சி எம்.பி.க்களை கிண்டலடித்த மோடி! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் பிரியா விடை கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

இதற்கிடையே எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று கருப்பு ஆடை அணிந்தும், கருப்பு பட்டை அணிந்தும் மாநிலங்களவைக்கு வந்திருந்தனர். 

இதை பார்த்த போது நான் ''பேஷன் ஷோ அணிவகுப்பை பார்த்தேன்'' என மோடி கிண்டல் அடித்துள்ளார். மேலும் மல்லிகார் ஜூன கார்கே, தனது தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கை வெளியிட்டதற்கு, கருப்பு அறிக்கை வெளியிட்ட மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நன்றி. நல்ல பணிகளை மத்திய அரசு செய்து கொண்டிருப்பதற்கு மத்தியில் இந்த அறிக்கை கருப்பு புள்ளி என குறிப்பிட்டுள்ளார். 

தமிழக அரசு கோரிய நிவாரணங்களை மத்திய அரசு ஒதுக்கவில்லை. தமிழகம் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஆகியவற்றை வலியுறுத்தி தி.மு.க எம்பிக்கள் மற்றும் அதன் கூட்டணி எம்பிகள் மத்திய அரசுக்கு எதிராக இன்று கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi teased opposition MPs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->