தாலி வாங்கினால் தட்டு இலவசம் - ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து 90 ஆயிரம் ரூபாயை இழந்த பெண்.!! - Seithipunal
Seithipunal


தாலி வாங்கினால் தட்டு இலவசம் - ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து 90 ஆயிரம் ரூபாயை இழந்த பெண்.!!

நாட்டின் தலைநகரான டெல்லியைச் சேர்ந்தவர் சவிதா ஷர்மா. வங்கியில் மூத்த நிர்வாகியாக பணிபுரிந்து வரும் இவர் முகநூல் பக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று ஒரு தாலி வாங்கினால் சாப்பாடு தட்டு இலவசம் என்ற விளம்பரம் வந்துள்ளது.

இதைப்பார்த்த சவிதா, இந்த சலுகை பற்றி அறிந்து கொள்வதற்காக அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சவீதாவின் அழைப்பை யாரும் எடுக்கவில்லை. சில மணி நேரத்திற்குப் பிறகு சவிதாவிற்கு மீண்டும் அழைப்பு வந்துள்ளது.

அப்போது எதிர் திசையில் பேசிய நபர் பிரபல உணவகமான சாகர் ரத்னாவில் இருந்து நீங்கள் இலவச சாப்பாடு தட்டை பெற்றுக் கொள்ளலாம், இந்த சலுகையைப் பெற நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் உள்ளே சென்று பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதன் படி சவிதா, போனில் கடவுச்சொல்லைப் பதிவிட்டுள்ளார். அடுத்த நிமிடமே அவருடைய போன் ஹேக் செய்யப்பட்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு முறையாக மொத்தம் 90 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. 

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சவிதா, தனது கிரெடிட் கார்டு பயன்பாட்டை ரத்து செய்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன் படி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

money fraud to bank woman employee in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->