வாட்டர் ஹீட்டரை ஆன் செய்தபோது பாய்ந்த மின்சாரம்.! பறிபோன தாய்-மகன் உயிர்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் வாட்டர் ஹீட்டரை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கனகநகர் பகுதியில் கணவருடன் வசித்து வந்தவர் ராய்ச்சூரை சேர்ந்து ஜோதி. இவரது மகன் ஜெயானந்த்(4) நேற்று முன்தினம் குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டரை தவறுதலாக ஆன் செய்துள்ளான். அப்பொழுது எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதையடுத்து சிறுவனின் சத்தம் கேட்டு ஓடி வந்த ஜோதி, மகனைக் காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில் இரண்டு பேரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மின் இணைப்பை துண்டித்து இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother and son died in electrocution in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->