கோடீஸ்வர தலைநகரமாக மாறிய மும்பை - எத்தனை கோடீஸ்வரர்கள் தெரியுமா? - Seithipunal
Seithipunal


2024 ஆம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில், இந்தியாவின் நிதி மையமாக இருக்கும் மும்பை, ‘கோடீஸ்வர தலைநகரமாக’ உருவெடுத்துள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி மற்றும் ஹைதராபாத் இடம்பிடித்துள்ளது.

மும்பையில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மிகப்பெரிய கோடீஸ்வர நகரமாக உருவெடுத்துள்ளது. டெல்லியை பொறுத்தவரை 18 புதிய கோடீஸ்வரர்கள் இணைந்துள்ளனர். அதன்படி, இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 29% ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயம் சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 25% குறைந்துள்ளது. இதன் மூலம் ஆசியாவில் செல்வத்தை உருவாக்கும் மையமாக இந்தியா வளர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இதுகுறித்து ஹுருன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைட் தெரிவித்ததாவது:- 

“ஆசியாவின் செல்வத்தை உருவாக்கும் இயந்திரமாக இந்தியா உருவாகி வருகிறது. சீனா அதன் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் 25% சரிவைக் கண்டாலும், இந்தியா 29% அதிகரித்து, 334 கோடீஸ்வரர்கள் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது” என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mumbai change Billionaires capital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->