ஆகா... இது வேற லெவல் மோசடி! இன்சூரன்ஸ் பணத்திற்காக குடும்பத்தோடு கும்மி அடித்த கொடுமை! - Seithipunal
Seithipunal


மும்பையில் தன்ராஜ் என்பவர் ஒரு இறப்பு சான்றிதழை இரண்டு வெவ்வேறு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சமர்ப்பித்து இன்சூரன்ஸ் பணம் பெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இன்சூரன்ஸ் நிறுவனத்தில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி ஆடிட்டிங் செய்யப்பட்டது. அப்போது ஒரே முகவரியில்  இரண்டு வெவ்வேறு பெயர்களில் இன்சூரன்ஸ் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேகமடைந்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்திய போது கீழ்க்கண்ட விபரங்கள் தெரியவந்துள்ளது.

மும்பையில் கடந்த 2021-ஆம் ஆண்டு 11-ம் தேதி கஞ்சன் ராய் என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், இவரது மகன் தன்ராஜ் என்பவர் இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக தனது தந்தையின் இறப்பு சான்றிதழை உரிய இடத்தில் சமர்ப்பித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, தன்ராஜூக்கு ரூபாய் 20.4 லட்சம் இன்சூரன்ஸ் பணம் வந்துள்ளது. இதன் பின்னர், கஞ்சன் ராயின் இறப்பு சான்றிதழை தன்ராஜ் வேறு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பித்து ரூபாய் 25 லட்சம் இன்சூரன்ஸ் பணம் பெற்றுள்ளார்.

இதனைப் போன்று கடந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி பவித்ரா என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது கணவர் பவித்ராவின் இறப்பு சான்றிதழ் சமர்ப்பித்து  ரூபாய் 24.2 லட்சம் இன்சூரன்ஸ் பணம் பெற்றுள்ளார்.

இது குறித்து இன்சுரன்ஸ் நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கஞ்சன் ராய் இரண்டு தனித்தனி ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி 5 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசி எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், கஞ்சன் ராய் மற்றும் பவித்ரா ஆகிய இருவரின் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட போலியான இறப்பு சான்றிதழில் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே இந்த மோசடி விவகாரத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இன்சூரன்ஸ் மோசடி தற்போது அம்பலமான நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளனர். இவர்களை கைது செப்பிய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai Insurance Forgery case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->