சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மீது ஆசிட் வீசி படுகொலை! - Seithipunal
Seithipunal


சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் பெண் மீது மர்ம நபர்பகள் ஆசிட் வீசியதில் அந்த பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள எலூரை சேர்ந்தவர் எட்லா பிரான்சிகா ( 35). இவர் அங்குள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜமுந்திரியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரான்சிகா கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பிரான்சிகா  வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, பைக்கில் வந்த 4 பேர் அவர் மீது ஆசிட் வீசினர். இதில் அவரது தலை மற்றும் முகம் மார்பு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அலறி துடித்து சாலையில் விழுந்தார்.

சுற்றியிருந்த மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விஜயவாடா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார் . எனினும் சிகிச்சை பலனின்றி பிரான்சிகா நேற்று பரிதாபமாக இறந்தார்.

ஆசிட் வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பிரான்சிகா மீது அடையாளம் தெரியாத 4 பெண்கள் ஆசிட் வீசி விட்டு சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனினும் காவல்துறையினருக்கு மேலும் சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murder by throwing acid on a woman who was walking on the road


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->