தனது பதவியை தக்க வைத்து கொண்ட எல்.முருகன், மோடியால் நடந்த சம்பவம்!!
murugan sustained for rajya sabha ministry
எல்.முருகன் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், புதிய அமைச்சரவை குழுவில் எல் முருகனை ஒன்றிய அமைச்சராக பிரதமர் நரேந்திர மோடி தக்கவைத்துக் கொண்டார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மேலவைக்கு(ராஜ்ய சபா) மோடி அமைச்சர்களை தேர்ந்தெடுத்தார், தமிழ்நாட்டில் நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ் ஜெய்சங்கர் ஆகியோரையும் மத்திய அமைச்சர்களாக தக்கவைத்துள்ளார். இருப்பினும், அவர்களின் இலாகாக்கள் பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்து கொண்டனர். மொத்தமுள்ள 71 அமைச்சர்களில் சுமார் 15 அமைச்சர்கள் ஆங்கிலத்திலும் மற்ற அமைச்சர்கள் இந்தியிலும் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறினார். “பிரதமராக, நீங்கள் அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பராமரிக்கவும், கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்தவும், மாநிலங்களின் உரிமைகளை மதிக்கவும், நமது ஜனநாயகத்தை பாதுகாக்கவும் உண்மையான உணர்வோடு செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறினார்.
English Summary
murugan sustained for rajya sabha ministry