போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி பேருந்தைக் கடத்திய மர்ம நபர் - திருப்பதியில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி பேருந்தைக் கடத்திய மர்ம நபர் - திருப்பதியில் பயங்கரம்.!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் மலையில் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் சார்பில் 10 மின்சார பேருந்துகளும், சில டீசல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. 

அதன் படி நேற்று வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பேருந்தை இன்று அதிகாலை முதல் காணவில்லை. இந்த நிலையில் காணாமல் போன பேருந்தை மர்மநபர் ஒருவர் இன்று காலை 3 மணி அளவில் மலையில் இருந்து திருப்பதிக்கு ஓட்டிச் சென்றது தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக தேவஸ்தான போக்குவரத்து துறை அதிகாரிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து இலவச பேருந்தை ஓட்டிச்சென்ற அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும், பேருந்தை  ஓட்டிச் சென்றவர் எந்த வழியாகச் சென்றார் என்பதை கண்டுபிடிப்பதற்காக திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்காக சுமார் 5000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் மர்ம நபர் ஒருவர் பேருந்தைக் கடத்திச் சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious boy theft free bus in tirupati temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->