கள்ளக்காதல் விவகாரம்: மாயமான கணவர் தூக்கில் பிணமாக மீட்பு.! தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாயமான கணவர் தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கும்பலகோடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தவர் நாகேஷ். இந்நிலையில் நாகேசுக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இவர்களது கள்ளக்காதல் விவகாரம் நாகேஷின் மனைவிக்கு தெரிய வந்ததால், இதுகுறித்து அடிக்கடி கணவன்-மனைவி இடையே தவறாறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இருப்பினும் நாகேஷ் கள்ளக்காதலை கைவிடாமல் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியிடம் கோபித்துக் கொண்டு நாகேஷ் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கணவர் வீட்டிற்கு வரவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த நாகேஷின் மனைவி, இது குறித்து கும்பலகோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நாகேஷ் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் விசுவேஸ்வரய்யா லே-அவுட் பகுதியில் உள்ள மரத்தில் நாகேஷ் தூக்கில் பிணமாக தூங்குவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார், நாகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் நாகேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து நாகேஷின் மனைவி மற்றும் கள்ளக்காதலியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious husband recovered from dead body hanging in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->