சட்டசபைக்குள் திடீரென நிர்வாணமாக ஓடிய ஆண்கள்.. அலறியடித்து ஓடிய பெண்கள்.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசுப்பணி நியமனம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை கோரி சட்டசபை நோக்கி நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தியவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு பணி நியமனத்தில் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சிலர் போலியாக எஸ்.சி/எஸ்.டி ஜாதி சான்றிதழ் பெற்று 267 பேருக்கு பணி நியமனம் பெற்றதாக புகார் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட எஸ்.சி/எஸ்.டி பிரிவை சேர்ந்த சிலர் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்தனர்.

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனையறிந்த பாதிக்கப்பட்ட 12க்கும் மேற்பட்டோர் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நிர்வாணமாக சட்டசபை நோக்கி ஓடியுள்ளனர்.

சட்ட சபையை நோக்கி நிர்வாணமாக ஆண்கள் ஓடுவதை பார்த்த அந்த வழியாக சென்ற பெண்கள் அதிர்ச்சிடைந்து தங்கள் முகத்தை மூடிக்கொண்டு ஓடினர். மேலும் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naked protest in satishkar assembly


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->