"மிஸ் இந்தியா 2023" பட்டத்தை வென்றார் நந்தினி குப்தா..!
Nandini Gupta wins Femina Miss India 2023 crown
ராஜஸ்தானை சேர்ந்த நந்தினி குப்தா, மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023 கிரீடத்தை வென்றார்.
மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் நேற்று முன்தினம் இரவு பிரம்மாண்டமாக "மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023" அழகி போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மிஸ் இந்தியா அழகியாக 19 வயதான ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த நந்தினி குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒரு மாடல் அழகி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
மேலும் டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா இரண்டாவது இடத்தையும், மணிப்பூரைச் சேர்ந்த தவ்னாவ்ஜாம் ஸ்ட்ரேலா லுவாங் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியின் முன்னாள் வெற்றியாளர்களான சினி ஷெட்டி, ரூபல் ஷெகாவத், ஷினாதா சவுகான், மானசா வாரணாசி, மனிகா ஷியோகாந்த், மன்யா சிங், சுமன் ராவ் மற்றும் ஷிவானி ஜாதவ் - மோஹேயின் ஆகியோர் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட லெஹெங்காக்களை அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். மேலும் பாலிவுட் நடிகர்கள் கார்த்திக் ஆர்யன் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றனர்.
English Summary
Nandini Gupta wins Femina Miss India 2023 crown