ரூ.40 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்.. டெல்லி விமான நிலையத்தில் 3 வெளிநாட்டவர்கள் கைது!
Narcotics worth Rs 40 crore seized Three foreigners arrested at Delhi airport
டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.40 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் நாட்டின் தலைநகரான டெல்லி வருபவர்களில் சிலர் போதைப்பொருள் கடத்தி வருவது வாடிக்கையாகி உள்ளது. இதனை கண்காணித்து சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவந்தாலும் தொடர்ந்து தங்கம் கடத்தல் ,போதைப்பொருள் கடத்தல் அதிகருத்துக்கொண்டு செல்கிறது.இந்தநிலையில் டெல்லி விமான நிலையத்தில்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்தது.
இதையடுத்து அதன்பேரில் தீவிர கண்காணிப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டபோது பிரேசில் மற்றும் கென்யாவில் இருந்து சந்தேகத்தை கிளப்பிய நிலையில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து கிடுக்கிப்பிடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கிடுக்கிப்பிடி சோதனையில் அவர்களுடைய உடைமைகளுடன் சேர்த்து கொகைன் போதைப்பொருள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 2¾ கிலோ எடை கொண்ட கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.40 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Narcotics worth Rs 40 crore seized Three foreigners arrested at Delhi airport