அழியாத கொள்கைகள் கலங்கரை விளக்கமாக திகழும்.! தேவருக்கு மோடி புகழஞ்சலி.!!
Narendra Modi praises muthuramalinga devar
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்து வரும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முத்துராமலிங்க தேவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளர் பக்கத்தில் "மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்" என தமிழில் பதிவிட்டுள்ளார்.
English Summary
Narendra Modi praises muthuramalinga devar