காங்கிரசுடன் இணைகிறதா தேசியவாத காங்கிரஸ்?! தத்காரே வெளியிட்ட தகவல்!! - Seithipunal
Seithipunal



சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த ஜூலை 1ம் தேதி பிரிந்து உருவான கட்சி தேசியவாத காங்கிரஸ். இக்கட்சியின் தலைவராக சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் உள்ளார். தற்போது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது இந்த கட்சி.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக அஜித் பவார் உள்ளார். இதையடுத்து சரத்பவார் கட்சியில் இருந்து பெரும்பான்மையான எம்எல்ஏ க்களை பிரித்து கூட்டிச் சென்ற அஜித் பவாரின் கட்சி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று தேர்தல் ஆணையமும் அறிவித்தது.

இதையடுத்து சரத்பவார் தனது கட்சியின் பெயரை தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) என்று மாற்றினார். இந்நிலையில் அஜித் பவாரின் கட்சியைச் சேர்ந்த சுனில் தத்காரே சரத் பவாரின் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ க்கள் காங்கிரசுடன் இணைய முயற்சித்து வருகின்றனர் என்று கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சரத்பவரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பத்திரிக்கையாளர்களிடம், "பாஜக வை மகிழ்விப்பதற்காகவே தத்காரே இவ்வாறு கூறி வருகிறார். நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் மஹாராஷ்டிராவில் அவர்களது கட்சி ஒரு இடத்தைக்கூட பிடிக்காது என்று தத்காரேவுக்கு தெரியும்" என்று பதிலளித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் சரத்பவார் கட்சியும், அஜித் பவார் கட்சியும் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் இணைந்து எதிர் எதிராக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Natioanlist Congress Party Joins Congress SaysThathkare


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->