அள்ளித் தந்த அன்னை... இந்திய விவசாயிகள் தினம்.!!
national farmers day 2021
இந்திய விவசாயிகள் தினம் :
இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் சரண் சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம்... விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ஆகும். இந்தியாவில் இன்றும் மக்கட்தொகையில் 60 சதவிகிதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய நிகழ்வுகள் :
1947ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிரான்சிஸ்டர், பெல் ஆய்வுக்கூடத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
1958ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரமான டோக்கியோ கோபுரம் திறக்கப்பட்டது.
1954ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடத்தப்பட்டது.
1981ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி.கக்கன் மறைந்தார்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மறைந்தார்.
2013ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்த மிக்கைல் கலாசுனிக்கோவ் மறைந்தார்.
2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர் மறைந்தார்.
English Summary
national farmers day 2021