விநாயகர் சிலைகளைக் கரைக்க கட்டணம் - அதிரடி உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக விடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது, ஆயிரக்கணக்கான விநாயர்கர் சிலைகளை கடல், ஆறு, ஏரி மற்றும் குளங்களில் கரைப்பது வழக்கம். ஆனால், ரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை கரைப்பதால் நீர் நிலைகள் மாசுபடுவதால், அதற்கான விதிமுறைகள் நீதிமன்ற வழிகாட்டுதல் படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க, விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதிக்க வேண்டும் என்று, கடந்த ஆண்டு சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை, விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம், ஏரிகள், ஆறுகள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட இயற்கையான நீர் நிலைகளில், விநாயகர் சிலைகள் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. மேலும், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பதில் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண, தமிழக அரசின் வருவாய், பொது, சுற்றுச்சூழல் துறைகளின் செயலர்கள் இடம்பெற்ற குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கை விசாரணை செய்த தீர்ப்பாயம், விரிவான தீர்ப்பை அளித்துள்ளது. அதாவது, தீர்ப்பாயம் அமைத்துள்ள அதிகாரிகள் குழு கூட்டத்தை ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, ஆறு மாதங்களுக்கு முன்பு நடத்த வேண்டும். 

விநாயகர் சிலைகளை கரைக்க செயற்கையான குளங்களை உருவாக்குதல், பிளாஸ்டர் ஆப் பாரிஸால் சிலைகள் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனுமதி அளிக்கப்படாத பகுதிகளில் சிலைகளை கரைத்தால் அபராதம் விதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி கேட்போரிடம் முன்கூட்டியே கட்டணம் வசூல் செய்ய ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கட்டணத்தை தீர்ப்பாய குழு தீர்மானிக்கும். விநாயகர் சிலைகள் கரைப்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து, மூன்று மாதங்களுக்கு முன், மாவட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். சிலைகளை கரைக்க வசூலிக்கப்படும் தொகையை நீர்நிலைகளை பராமரிக்க செலவிடலாம் என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

national Green Tribunal order collect fees for vinayagar statue melt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->