அடக்கடவுளே!!!15 லட்சம் லஞ்சமா!!! தேசிய நெடுஞ்சாலை துறை மேலாளர் லஞ்சம் வாங்க காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


டெல்லியில் தனியார் நிறுவன பொது மேலாளர்,தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்பான ஒப்பந்த பணிகளை மேற்கொண்டார்.பிறகு ஒப்பந்த பணி தொடர்பான பில் தொகையை அனுமதிக்கும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளர் ராம்பிரித் பஸ்வானை அணுகினார்.

அதற்கு அவர், ரூ.15 லட்சம் தந்தால் பில்லில் கையெழுத்திடுவதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தகவல் கிடைத்த சி.பி.ஐ அதிகாரிகள், அவர்கள் இருவரையும் ரகசியமாக கண்காணித்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் 15 லட்சம் ரூபாயை பஸ்வானிடம் தனியார் நிறுவன மேலாளர் கொடுத்தபோது, இருவரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

 அவர்களுக்கு உதவியாக இருந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.மேலும் லஞ்சம் பெற உதவியாக இருந்த நெடுஞ்சாலை ஆணைய தலைமை பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட 6 அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன மூத்த அதிகாரிகள் 4 பேர் உள்பட12 பேர் மீது, சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதில் பஸ்வானுக்கு சொந்தமான பாட்னா, சமஸ்திபூர், வாரணாசி,முசாபர்பூர், பெகுசராய், ராஞ்சி ஆகிய இடங்களிலுள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில், சி.பி.ஐ நடத்திய சோதனையில், ரூ.10 லட்சமம் மற்றும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இதுத்தொடர்பான மேற்கட்ட விசாரணையை சி.பி.ஐ தொடர்ந்து நடத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

National Highways Department manager to take 15 lakhs bribe


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->