தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம்? இறுதி முடிவை எடுக்கும் இந்திய தேர்தல் ஆணையம்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான சரத் பவார் அரசியல் களத்தில் முக்கியமான நேரத்தில் அதிரடி முடிவு எடுப்பவர். இருப்பினும் மகாராஷ்டிராவில் இவரது அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி மகாராஷ்டிரா அரசியலில் இணைந்து துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். 

அவருடன் சில எம்.எல்.ஏக்களும் மந்திரியாக பதவி ஏற்றனர். இதனால் உண்மையான தேசியவாத காங்கிரஸ் நாங்கள் தான் என்றும் அதிக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்களுக்கு தான் உள்ளது என்றும் சரத் பவார் தெரிவித்து வருகிறார். 

இதனால் இருதரப்பிலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் போன்றவற்றிற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையம் இந்த மனு மீது வருகின்ற அடுத்த மாதம் 6 ஆம் தேதி விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சரத் பவார் பிரிவுக்கும், அஜித் பவார் பிரிவுக்கும் உத்தரவு பிறப்பித்து இரு தரப்பிலும் இருந்து வழங்கப்படும் முழுமையான பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும். 

இது குறித்து அஜித் பவார் தெரிவிக்கையில், 'அவர்களுடைய தரப்பு வாதங்களை எல்லோருக்கும் முன்னெடுத்து வைக்க உரிமை உள்ளது. 

அதன் அடிப்படையில் நாங்கள் எங்களுடைய தரப்பு வாதத்தை இந்திய தேர்தல் ஆணையம் முன்பு வைப்போம்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nationalist Congress Party Election Commission of India final decision


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->