தேசியவாத காங்கிரஸ் எம்.பி தகுதி நீக்கம்... மத்திய அரசு அதிரடி...!! - Seithipunal
Seithipunal


தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இலட்சத்தீவு எம்பி முகமது பைசல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு அவரது உறவினரான முகமது சாலியை தாக்கி கொலை முயற்சி செய்ததாக எம்பி முகமது பைசல் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் எம்பி முகமது பைசல் உட்பட 32 பேர் மீது குற்றம் சாட்டில் இருந்தனர். இந்த வழக்கில் எம்.பி முகமது பைசல் உட்பட 4 பேர் குற்றவாளிகள் என கேரளா உயர்நீதிமன்றம் அறிவித்தது.

இந்த வழக்கில் தேசியவாத காங்கிரஸ் எம்பி முகமது பைசலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசியவாச காங்கிரஸ் எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் செய்வதாக மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தற்பொழுது லட்சத்தீவு நாடாளுமன்ற தொகுதி காலியாகியுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்பி தகுதிமிக்க செய்யப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ncp mp disqualified from Lok Sabha number by central govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->