தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் நடந்த விவாதத்தின் முக்கிய அம்சங்கள். என்னென்ன ? - Seithipunal
Seithipunal


''மோடிதான் எங்கள் தலைவர்" தேசிய ஜனநாயகக்கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் அதிகாரப்பூர்வமாகவும், எழுத்துப்பூர்வமாகவும் மோடியின் பெயரைப் போட்டு முத்திரை பதித்தன. பிரதமர் மோடியுடன் ஜேபி நட்டா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விவாதிக்கபட்ட சிறப்பம்சங்கள்.

பிரதமர் மோடியின் தலைமைத்துவத்திற்கும், அவரது தலைமையில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றத்திற்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட அணைத்து தலைவர்களும் தங்கள் மனமார வாழ்த்து தெரிவித்தனர்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பிரதமரின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளை கூட்டத்தில் கலந்து கொண்ட அணைத்து தலைவர்களும் பாராட்டு மழை பொழிந்தனர்.

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தெளிவான பார்வை பிரதமருக்கு இருப்பதாகவும், வெற்றி பாதை இலக்கில் அணைத்து தலைவர்களும் பங்குதாரர்களாக இருப்பதாகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டாளிகள் கூறினர்.

உலக அளவில்  இந்தியாவை உயர்த்துவதிலும், இந்திய நாட்டின் பெருமையை உலகுக்கு கொண்டு சேர்ப்பதிலும் பிரதமரின் அவர் பங்கை மிக மிக சிறப்பாக பணியாற்றியதாக தலைவர்கள் பாராட்டினர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் வறுமை ஒழிப்புக்கான பிரதமரின் முயற்சிகளைப் பாராட்டினர் மற்றும் நல்ல பணிகளைத் தொடர தாங்களும் துணை இருப்பதாக உறுதியளித்தனர்.

60 ஆண்டுகளுக்கு முன்பு ஜவாஹர் லால் நிகழ்த்திய இந்த சாதனை இந்தியா கடைசியாகப் பெற்ற மூன்றாவது தொடர்ச்சியான அரசாங்கத்திற்கு இது ஒரு வரலாற்று ஆணை என்று பிரதமர் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NDA meeting of the prominent leaders


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->