ஆந்திரா : 12 வயது சிறுமிக்கு இரண்டவது திருமணம்.! வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் சித்தூரை அடுத்த குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பதினொரு வயது சிறுமி. இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் கிராமத்திற்கு அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்டார். 

இந்நிலையில் இருபத்தைந்து வயதுடைய அந்த வாலிபருக்கு 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியை இரண்டாவது திருமணம் செய்வதற்கு அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி மாணவிக்கும் வாலிபருக்கும் அவரது வீட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. 

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் திருப்பதியில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடைபெற்றதாக  தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலறிந்த குழந்தைகள் நல அலுவலர் அருணாஸ்ரீ மற்றும் குப்பம் போலீசார் மணமகன் வீட்டிற்கு விரைந்து சென்று அங்கிருந்த சிறுமியை மீட்டு திருப்பதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர் அருணாஸ்ரீ குப்பம் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் பெற்றோர் மற்றும் மணமகன் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near andira twelve years girl second marriage accuest arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->