அசாம் : நீதிமன்றத்திற்கு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த வழக்கறிஞர் - அதிரடி உத்தரவிட்ட நீதிபதி.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உயர்நீதிமன்றத்திற்கு நேற்று மகாஜன் என்ற வழக்கறிஞர் '"ஜீன்ஸ் பேண்ட்" அணிந்து கொண்டு ஒரு ஜாமீன் மனு விசாரணைகாக ஆஜராக வந்தார். 

இதை பார்த்த அதிருப்தி அடைந்த நீதிபதி கல்யாண் ராய் சுரானா, உடனடியாக போலீசை வரவழைத்து அந்த வழக்கறிஞரை நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேற்றுவதற்கு உத்தரவிட்டார். மேலும், அவர் ஆஜராக வந்த ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தார். 

இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது, " நன்கு கற்றறிந்த வழக்கறிஞர் பி.கே.மகாஜன், மனுதாரருக்காக நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்தபோது, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்துள்ளார். 

ஆகவே அவரை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். அதனால், அவர் ஆஜராக வந்த வழக்கு விசாரணையும் ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்த விவகாரத்தினை தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்" என்று நீதிபதி கல்யாண் ராய் சுரானா தெரிவித்தார். 

மேலும், இந்த சம்பவம் குறித்து அசாம், நாகாலாந்து, மிசோரம் மற்றும் அருணாசலபிரதேச பார் கவுன்சில்களுக்கும் இது குறித்து தெரிவிக்க ஆணையிட்டார். வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்திற்கு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near assam lawyer expelled in high court for wearing jeans pant


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->