பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை.. பின்னணியில் தனியார் பள்ளி ஆசிரியர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் சம்பிகேஹள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான சொக்கனஹல்வி பகுதியைச் சேர்ந்தவர் முகமது நூர். இவர்  மகன் மோகின் அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 

இவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளேன். அப்போது மாடியில் உள்ள தடுப்புசுவரை பிடித்துக்கொண்டு சிலநேரம் தொங்கினார். அப்போது வலி தாங்காமல் கை நழுவி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலீசார் தகவல் அளித்தனர். 

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில், சிறுவனின் பள்ளியில் நேற்று தேர்வு  நடைபெற்றுள்ளது. அந்த தேர்வில் சிறுவன் சக மாணவர்களை பார்த்து தேர்வு எழுதியதால் ஆசிரியர் அவரை திட்டி வெளியில் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதனால், மனம் உடைந்த சிறுவன் நேற்று மாலை தனது வீட்டிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

மேலும், தற்கொலை செய்வதற்காக மாடியில் இருந்து குதிக்க முயன்ற சிறுவனை குடியிருப்பில் வசிப்பவர் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், அவர்களால் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.

இதற்கிடையில் அங்குள்ள சிலர் சிறுவன் 14-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சிப்பது மற்றும் அங்குள்ள தடுப்பு சுவரை பிடித்து தொங்குவது உள்ளிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near banglore school student sucied


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->