பெங்களூரில் பரபரப்பு.. காதலியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆதேஷ் என்பவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரில் ஐடி நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கும் இமாச்சல பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விமானப்பணிப்ப்பெண்ணான அர்ச்சனா தீமன் என்ற இளம்பெண்ணுக்கும் டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறி பின்னர் இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே ஆதேஷ் வேறு ஒரு பெண்ணை காதலிக்க தொடங்கியுள்ளார்.

இதையறிந்த அர்ச்சனா துபாயில் இருந்து ஆதீஷை சந்திப்பதற்கு பெங்களூரு வந்துள்ளார். இதையடுத்து அர்ச்சனா ஆதீஷ் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். அங்கு அர்ச்சனா குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதித்து கீழே விழுந்து இறந்துள்ளார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அர்ச்சனாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் போலீசார் இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அர்ச்சனாவின் பெற்றோ பொழில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, போலீசார் ஆதேஷை கைது செய்து விசாரணை செய்தனர்.

அதில், சம்பவத்தன்று ஆதேஷும் அர்ச்சனாவும் சினிமா பார்க்கச் சென்று விட்டு பிறகு இருவரும் பார்ட்டியில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பியதும், அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஆதேஷ் அர்ச்சனாவை பிளாட்டில் இருந்து கீழே தள்ளிவிட்டதும் தெரியவந்து உள்ளது. 

இதையடுத்து போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து ஆதேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near banglore young man arrested for kill girl friend


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->