நீதிமன்றத்தில் ஆபாச நடனம் ஆடிய பெண் - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் இந்தியாவில் உள்ள வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் பொது மக்கள் வண்ண பொடிகளைத் தூவியும், தண்ணீர் ஊற்றியும் கொண்டாடினர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 6 ஆம் தேதி நாட்டின் தலைநகரான டெல்லியில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் புதுடெல்லி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ஹோலி பண்டிகை ‘ஹோலி மிலன் விழா’ கொண்டாடப்பட்டது.

அப்போது, இந்த விழா மேடையில் சினிமா பாடலுக்கு பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வந்தது. இந்த வீடியோ தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது,

"நீதிமன்ற வளாகத்திற்குள் இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவது முறையற்றது. நீதிமன்ற அமைப்பு குறித்த எண்ணத்தை இதுபோன்ற நிகழ்ச்சிகள் சீர் குலைத்துவிடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அமைப்பிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் கூட்டமைப்பு செயலுக்கு கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near delhi woman dance in court for holi festival vedio viral


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->