அரியானா : கார் மீது மோதிய டிப்பர் லாரி - ஒரே நேரத்தில் 6 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் அருகே பல்வால் பகுதியைச் சேர்ந்த சிலர் ஒரு காரில் பரிதாபாத் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து, இந்த கார் நேற்று இரவு பரிதாபாத்-குருகிராம் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. 

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று கார் மீது அதிவேகத்துடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதைப்பார்த்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தனர். அதில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருமே 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near hariyaana six peoples died for car accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->