ஜார்கண்டில் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து - மருத்துவர் உள்பட 6 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஹஜ்ரா நினைவு மருத்துவமனையில், குடியிருப்பு வளாகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த வளாகத்தில், மருத்துவர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், அந்த வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வளாகம் முழுவதும் புகை பரவி, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு வளாகத்தில் உள்ளவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில், மருத்துவர் விகாஸ் ஹஜ்ரா, அவரது மனைவியான பிரேமா ஹஜ்ரா, அவர்களின் வீட்டு வேலையாளான தாரா மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்குள்ள ஒரு நபர் படுகாயம் அடைந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி, தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர், இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நபரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனால், பலி எண்ணிக்கையம் ஆறாக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near jarkant six peoples died for fire accident in house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->