கர்நாடகா || அசுத்த தண்ணீரைக் குடித்த கிராம மக்கள்.! பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு.!
near karnataka village peoples drink dirty water 3 peoples died
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் அசுத்தமான தண்ணீரைக் குடித்ததினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
கடந்த 23-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள முதேனூர் கிராமத்தில் ஒரு பழைய கிணற்றில் இருந்து வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர்க் குழாய் இணைப்புகளில், நச்சு கலந்த அசுத்தமான தண்ணீர் வந்துள்ளது. இதனால், அந்த கிராமத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இன்று 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், இந்த நச்சு கலந்த தண்ணீரைப் பருகிய 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.
தற்போது, உயிரிழந்த 70 வயதுடைய முதியவர் சிவப்பா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். சிவப்பா நான்கு நாள்களுக்கு முன்பு நச்சு கலந்த தண்ணீரைப் குடித்ததால் நோய்வாய்ப்பட்டார்.
மருத்துவமனையில் உள்ள 94 பேரில், 44 ஆண்கள், 30 பெண்கள். 12 சிறுவர்கள் மற்றும் 8 சிறுமிகள் ஆவர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி என்று ஒரேமாறியான அறிகுறிகள் தென்பட்டது.
இதனால், கிணற்றில் உள்ள தண்ணீர் மாசுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காதது குறித்து முதேனூர் மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
English Summary
near karnataka village peoples drink dirty water 3 peoples died