ஒட்டுமொத்த நிம்மதியையும் இழந்து விட்டேன் - 25 கோடி பம்பர் லாட்டரி பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுநர் தகவல்..!  - Seithipunal
Seithipunal


கேரளத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மலேசியாவுக்கு சமையல் வேலைக்குச் செல்ல தயாரான நிலையில், ஓணம் பம்பா் லாட்டரி மூலம் ரூ.25 கோடி பரிசு கிடைத்தது. இந்த லாட்டரி சீட் கிடைத்து ஐந்து நாள்கள் கூட ஆகாத நிலையில், அவர் தனது நிலையை நினைத்து வருந்துவதாகக் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் எனது ஒட்டுமொத்த நிம்மதியையும் இழந்துவிட்டேன். நான் எனது சொந்த வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. இந்த லாட்டரி சீட் விழுந்ததில் இருந்து தினமும் என் வீட்டிற்கு வந்து பணம் கேட்கிறார்கள். என்னால் ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஸ்ரீவராஹம் பகுதியைச் சோ்ந்தவா் அனூப். இவா் ஒரு ஆட்டோ ஓட்டுநர். வீட்டில் உள்ள கடன் சுமை காரணமாக அனூப் மலேசியாவுக்கு சமையல் வேலைக்குச் செல்லத் தயாரானாா். இதற்காக, அனூப் வங்கியில் ரூ.3 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதற்கு வங்கி நிா்வாகம் ஒப்புதல் அளித்த நிலையில், ஓணம் பம்பா் லாட்டரியில் அனூப் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.25 கோடி பரிசு கிடைத்ததாக அவரது கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்தது.

இதனால் வியப்படைந்த அவா், தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஆற்றிங்கல்லில் உள்ள லாட்டரி ஏஜென்ஸியை அணுகினாா்.  அவருக்கு வரிப்பிடித்தம் போக ரூ.15 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

பரிசு விழுந்த அன்று அனூப் தெரிவித்ததாவது, இந்தப் பணத்தை வைத்து முதலில் வீடு கட்டுவேன். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவேன். எனது உறவினா்களுக்கு உதவுவேன். அறப்பணிகளைச் செய்வேன். கேரளத்திலேயே புதிதாக ஹோட்டல் தொழில் ஆரம்பிப்பேன். லாட்டரி சீட்டுகளை தொடா்ந்து வாங்குவேன் என்று தெரிவித்தார்.

ஆனால் தற்போது அவர் பேசுகையில், இந்த பரிசுத் தொகையை நான் பெற்றிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். பரிசு விழுந்த முதல் இரண்டு நாள் எனக்குக் கிடைத்த புகழால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் தற்போது, நான் இருக்கும் வீட்டை விட்டு வெளியே கூட போக முடியவில்லை. என்னை பார்க்கும் யார் ஒருவரும் ஓடி வந்து உதவி கேட்கிறார்கள்.

அனூப் தனக்கு இன்னும் பணம் வந்துசேரவில்லை என்பதை சமூகவலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்.

"என் வீட்டைச் சுற்றிலும் அதிகக் கூட்டம் இருப்பதால், பக்கத்து வீட்டார் எல்லாம் என் மீது கோபத்தில் இருக்கிறார்கள். இதை விட மிகச் சொற்ப பரிசுத் தொகையே எனக்கு கிடைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala auto driver win lotry sheet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->