கேரளாவில் கால்பந்து ரசிகர்களிடையே மோதல்.!
near kerala football fans fight
உலகில் பல்வேறு விதமான விளையாட்டுகள் திருவிழா கணக்கில் கோலாகலமாக நடைபெறுகின்றன. அந்தவகையில், மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் கால்பந்து போட்டியும் ஒன்று.
இதையடுத்து இந்த வருடத்திற்கான உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த
போட்டியில் விளையாடும் அணிகளுக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 20-ந் தேதி தொடங்கிய போட்டியை, தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியின் டி-சர்ட்டுகளை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர்.
அந்த வகையில், கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் இந்த போட்டியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேரணியில் திடீரென பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்பது குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை. அதன் பின்னர், உள்ளூர் பிரமுகர் ஒருவர் இரு அணி ரசிகர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இது, தொடர்பாக புகார் ஏதும் அளிக்காததால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆனால் கால்பந்து ரசிகர்கள் மோதிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
English Summary
near kerala football fans fight