கேரளா : சாலை விபத்தில் சிக்கிய உள்துறை செயலாளர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில் உள்துறை செயலாளராக இருப்பவர் வேணு. இன்று இவர் தனது மனைவி சாரதா மற்றும் மகன் உள்ளிட்டோருடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். 

இவர்கள் காயம் குளம் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, லாரி ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேணு, அவரது மனைவி, மகன் மற்றும் கார் ஓட்டுனர் உள்ளிட்டோர் காயமடைந்தனர். 

இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு, பருமலா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

இதுக்குறித்து போலீசார் தெரிவித்ததாவது, "அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பின்பு உடல்நலம் தேறி வருகின்றனர்" என்றுத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala home secretry injury in raod accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->