கேரளாவில் பரபரப்பு.! சிறுவனைக் கட்டிப்பிடித்து உதட்டைக் கடித்த முதியவர் - போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியைச்  சேர்ந்தவர் மம்மு குட்டி என்ற மம்முட்டி. இவர் மாகி பிராந்தியம் பள்ளூர் பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். 

வழக்கம் போல் உறவினர் வீட்டிற்குச் சென்ற அந்த முதியவர், வீட்டில் படுத்திருந்த பதினேழு வயது சிறுவனை கட்டிப்பிடித்து அவரின் உதட்டை கடித்து காயப்படுத்தி விட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன், சம்பவம் தொடர்பாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் முதியவர் மம்முட்டியை கைது செய்தனர். அதன் பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு நீதிபதிகளின் உத்தரவின் படி, முதியவரை மாகி சிறையில் அடைத்தனர். முதியவர் ஒருவர் சிறுவனை கட்டிப்பிடித்து உதட்டை கடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala old man arrested for boy hug and bit lip


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->